Home வாழ்வியல் உடலுறவு வைத்து கொண்டால் உடல் எடை அதிகரிக்குமா? ஆய்வு சொல்லும் முடிவு இதோ!

உடலுறவு வைத்து கொண்டால் உடல் எடை அதிகரிக்குமா? ஆய்வு சொல்லும் முடிவு இதோ!

1689
0

இன்றைய நவநாகரிக உலகில் உடலின் எடையை அளவுடன் வைத்திருக்கவே அனைவரும் விரும்புவர். அதற்கு பலரும் எடுக்கும் பிரயத்தனங்கள் ஒருபுறம் இருக்க பலர் அன்றாட வாழ்வில் பல விடயங்களை இதன் காரணமாக ஒதுக்கி வைத்து கொள்கிறார்கள். Married People Body Weight Maintenance Health Tamil News Latest

ஒரு சிலர் பிடித்த உணவு வகைகளை கூட இதனால் தியாகம் செய்து கொள்கிறார்கள். இதனை தாண்டி சிலருக்கு உடலுறவு வைத்து கொள்வதில் கூட உடல் எடை அதிரிப்பு வந்துவிடுமோ என்னும் பலத்த சந்தேகம் உள்ளது.

திருமணம் முடித்தவர்கள் பருத்த உடல் அளவை பெற உடலுறவு தான் காரணம் என்று பலரும் எண்ணிக்கொள்கிறார்கள்.

ஆனால் சமீபத்தில் கனடாவில் உள்ள க்யூபெக் என்ற பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில். உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆய்வில் அவர்கள் கூறியிருப்பது, உடலுறவு கொள்வதன் மூலம் நிமடத்திற்கு நிமிடம் நமது உடலில் உள்ள கலோரிகள் நாம் உடலுறவு கொள்ளும் நிலைக்கு ஏற்றவாறு கரைக்கப்படுகின்றன.

சீரான இரத்த ஓட்டம் தான் ஆண்களின் விறைப்புத்தன்மையை அதிகப்படுத்துகிறது. அதிகமாக நீங்கள் உடலுறவுக் கொள்ளும் போது இரத்த ஓட்டம் சீராகிறது. இரத்த ஓட்டம் சீரடையும் போது உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. இதனால் நீங்கள் உடல் எடை குறைக்க முடியும்

தினமும் உடலுறவு மேற்கொள்ளும் போது உங்கள் மனதில் அழுத்தம் குறைந்து, மனமும், உடலும் நல்ல நிலை அடைகிறது. உடல்நிலை இதன் மூலம் புத்துணர்ச்சி பெறுகிறது.

ஆகையால் உடல் எடை அதிகரிப்பு பற்றிய வீணான பயத்தை தவிர்த்து ஆரோக்கியமான உடலுறவில் பயமில்லாமல் ஈடுபடுங்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை…

வட மாகாண சபையின் வீணாய் போன காலமும் விக்கி மீதான பார்வையும்!

கப்பலில் ஆபத்தான செல்பி எடுத்த மகாராஷ்டிரா முதல் மந்திரியின் மனைவிக்கு நேர்ந்த கதி!

காணியில்லாத மலையக மக்களுக்கு ஜனாதிபதியின் வரப்பிரசாதம்!

யார் இந்த ஜமால் கஸோஜி? ஏன்? எப்படி கொலை செய்யப்பட்டார்? அதிர வைக்கும் பார்வை!

Married People Body Weight Maintenance Health Tamil News Latest