Home வாழ்வியல் தாம்பத்தியத்தில் ஆண்மையை அதிகரிக்கும் உணவு வகைகள்!

தாம்பத்தியத்தில் ஆண்மையை அதிகரிக்கும் உணவு வகைகள்!

1269
0

இன்றைய நவீன யுகத்தில் பலவிதமான ஆடம்பர உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டாலும் எமது தமிழ் பாரம்பரிய உணவுகளுக்கு என்று சில தனித்துவம் எப்போதும் இருக்கும். Married Couple Best Foods Health Tamil News Latest

குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் ஆண்மை விருத்தி என்பது இன்றியமையாத ஒன்று. ஆண்மை விருத்தியை அதிகரிக்க உதவும் பலவிதமான உணவுகள் உள்ளன.

உணவு பொருட்கள் ஆண்மையை அதிகரித்து பாலுறவில் அதிக பயனை தருமா என்றால் நிச்சயம் பலன் உண்டு.

அவ்வாறன சில உணவு வகைகள் பற்றி பார்க்கலாம்.

பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வை தரவல்லது.

ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும்.

பழங்களில் பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் போன்றவை சிறந்த பாலுணர்வு தூண்டிகள். முக்கியமாக வாழைப்பழத்தில் உள்ள இராசாயன பொருள் சிறந்த செக்ஸ் உணர்வை கொடுக்கவல்லது.

மாமிச வகைகளில் சிறிய மீன்கள் மற்றும் ஆற்று மீன்கள் உண்பதின் மூலம் சிறந்த ஆண்மை பலனை அனுபவிக்க முடியும்.

உறவில் விரைவான விந்து வெளியேறல் பிரச்சனை உள்ளவர்கள் ஜாதிக்காயை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம். அது மட்டுமன்றி ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை போன்றவையும் பாலியல் ஆசையை அதிகப்படுத்தும்.

பால் உணவுகளில் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இல்லறத்தில் என்றுமே சிக்கல் இருக்காது.

எமது முன்னோர்கள் உணவுக்கு பின்னர் வெற்றிலை போட்டு கொள்வது தாம்பத்தியத்தின் தூண்டலை ஏற்படுத்தவே.

ஆண்மை அபிவிருத்தி மற்றும் நீண்ட உடலுறவு போன்றவற்றுக்கு எமது உணவே முதல் மருந்து. அதைவிடுத்து மாத்திரைகளை நம்பி ஆரோக்கியத்தை ஏன் கெடுத்து கொள்ள வேண்டும்?.

வாழ்வியல் பதிவுகளுக்கு அனுசரணை வழங்குபவர்கள் :

இயற்கையான உணவு உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனமாகிய Golden Joint Merchants.

இவர்களின் முகப்புத்தக பக்கத்திற்கு சென்று தூய இரசாயன கலப்பில்லாத உணவு பொருட்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆண்மையை குறைக்கும் உணவு வகைகள் பற்றி அடுத்த வாழ்வியல் பதிவில் பார்க்கலாம்.

அதிகம் வாசிக்கப்பட்டவை…

உடலுறவு வைத்து கொண்டால் உடல் எடை அதிகரிக்குமா? ஆய்வு சொல்லும் முடிவு இதோ!

விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய “தமிழ் மக்கள் கூட்டணி” உதயமாகியது!

வட மாகாண சபையின் வீணாய் போன காலமும் விக்கி மீதான பார்வையும்!

யார் இந்த ஜமால் கஸோஜி? ஏன்? எப்படி கொலை செய்யப்பட்டார்? அதிர வைக்கும் பார்வை!

Married Couple Best Foods Health Tamil News Latest