Home சினிமா தயாரிப்பாளர் சங்க பூட்டை தகர்த்த நடிகர் விஷால் கைது

தயாரிப்பாளர் சங்க பூட்டை தகர்த்த நடிகர் விஷால் கைது

351
0

Vishal Arrest


தமிழகம் – சென்னையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயன்றதாக அச்சங்கத் தலைவரான நடிகர் விஷால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஐம்பதுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், நிர்வாகிகளுடன் அலுவலகத்திற்கு சென்று, பூட்டை உடைக்க முயன்றுள்ளார்.

அதற்கு அனுமதி மறுத்த, தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் கோவிந்தராஜுடன் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து விஷால், மன்சூர் அலிகான் மற்றும் அவரது ஆதரவாளர்களை பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

முன்னதாக போலீசார் கைது செய்ததும் வேனில் அமர்ந்து இருந்த நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது,

ஒரு திருட்டு பூட்டுக்கு காவல் காக்கிறார்கள். சம்பந்தமில்லாதவர்கள் பூட்டு போட்டு இருக்கிறார்கள். அவர்களை ஏன் இவ்வளவு போலீசார் பாதுகாக்கிறீர்கள்.

எங்கள் பூட்டு, எங்கள் அலுவலகம், நான் எந்த தப்பும் செய்யவில்லை. அந்த பூட்டை உடைத்து உள்ளே போகணும் என்றேன். முடியாது என்றார்கள்.

கேள்வி கேட்டதற்கு நாங்கள் அரசு ஊழியர்கள். எங்கள் வேலையை செய்ய விடுங்கள் என்று கைது செய்கிறார்கள். இந்த செயல்பாடுகள் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. என்றார்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

புதிய ஐ.தே.க அரசில் தமிழ் தரப்புகளுக்கு ஏற்பட்டுள்ள தர்ம சங்கட நிலை!

எதிர்வரும் 2019 இல் இது தான் நடக்கும்! அதிர வைக்கும் சோதிட கணிப்பு!

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் உணர்ச்சி வசப்பட்ட மனோகணேசன் கூறிய விடயம்!

ஐ.தே.க சிரேஸ்ட் உறுப்பினருக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் வழங்கிய ஹிருனிகா! காரணம் இது தான்!

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி: மனைவிக்கு ஜனாதிபதி வழங்கிய சலுகை

சுற்றும் இராட்டினத்தில் செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவல சாவு!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Vishal Arrest