Home இந்தியா அசாமில் மலிவு விலையில் எலிக் கறி விற்பனை

அசாமில் மலிவு விலையில் எலிக் கறி விற்பனை

176
0

Rat Curry Assam

இந்தியா – அசாமில் 1 கிலோ எலிக்கறி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அசாம் மாநிலம் பக்சா மாவட்டத்தில் குமரிகட்டா என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும்.

அங்கு எலிக்கறி விற்பனை மிகவும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

கோழிகறி, பன்றி கறியை விட எலிக்கறி அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

நெல் வயல்களில் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை விவசாயிகள் பொறி வைத்து பிடிக்கிறார்கள்.

இந்த எலிகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி வாரச்சந்தையில் விற்பனை செய்கிறார்கள்.

புதிதாக பிடிக்கப்பட்ட எலிகளுடன் தோல் உரிக்கப்பட்ட எலிக்கறி, வேக வைக்கப்பட்ட எலிக்கறி விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ எலிக்கறி ரூ.200க்கு விறக்கப்படுகிறது.

பழங்குடி மக்களுக்கு எலிகள் நல்ல வருமானம் தரும் தொழிலாக உள்ளது. தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் அவர்கள் குளிர் காலத்தில் வேலை இல்லாதபோது எலிகளை பிடித்து விற்று வருமானம் தேடிக் கொள்கிறார்கள்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாக வயல்வெளிகளில் எலிகள் அதிகமாகி வருகின்றன. அவைகள் பயிர்களை நாசம் செய்வதால் பொறி வைத்து பிடிக்கிறோம். பின்னர் வியாபாரிகளிடம் விற்று விடுகிறோம்” என்றார்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

உயர்தர பரீட்சை முடிவுகள் 30ம் திகதிக்கு முன் வெளியாகிறது

குகவரதன் கைது : கட்சி அங்கத்துவத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்

நாட்டை புரட்டிப்போட்ட ஜனாதிபதி ஓய்வெடுக்க தாய்லாந்து செல்கிறார்.

ஐ.தே.க சிரேஸ்ட் உறுப்பினருக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் வழங்கிய ஹிருனிகா! காரணம் இது தான்!

செல்பியால் வந்த சோதனை : ஒருவர் பலி

யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரின் திருகுதாளம் அம்பலம்!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Rat Curry Assam