Home விளையாட்டு 104 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது இலங்கை : போல்ட் அபாரம்

104 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது இலங்கை : போல்ட் அபாரம்

169
0

Sri Lanka All Out

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டுகொண்டது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 178 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.

சவுத்தி அதிகபட்சமாக 68 ரன் எடுத்தார். லக்மால் 5 விக்கெட்டும், குமார 3 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன் எடுத்து இருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 90 ரன்கள் பின்தங்கிய நிலை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.

நியூசிலாந்தின் வேகப்பந்து வீரர் போல்ட்டின் அதிரடியான பந்து வீச்சால் இலங்கை அணி நிலைகுலைந்தது. அவர் 15 பந்துகளில் 4 ரன் கொடுத்து இலங்கை அணியின் எஞ்சிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதில் 4 வீரர்கள் பேரைரா, லக்மல், சமிரா, குமார ‘டக்அவுட்’ ஆனார்கள்.

அவர் வீசிய 4-வது பந்தில் சில்வா (21 ரன்) ஆட்டம் இழந்தார். 5-வது பாலில் பவுண்டரி கொடுத்தார். அடுத்த பந்தில் ரன் கொடுக்கவில்லை. அதற்கு அடுத்த 2 ஓவர்களில் அவர் 3 விக்கெட்டையும், 2 விக்கெட்டையும் ரன் கொடுக்காமல் கைப்பற்றினார்.

போல்ட்டின் அதிரடியான பந்து வீச்சில் இலங்கை அணி 41 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. மத்தியூஸ் 33 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

74 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடியது.

இதன்படி இன்றைய ஆட்ட நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 231 ரண்களுடன் உள்ளது. அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தொடக்க வீரர்கள் ராம்டாம், லாதம் அரைசதம் அடித்தனர். ராவல் 76 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

உயர்தர பரீட்சை முடிவுகள் 30ம் திகதிக்கு முன் வெளியாகிறது

குகவரதன் கைது : கட்சி அங்கத்துவத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்

நாட்டை புரட்டிப்போட்ட ஜனாதிபதி ஓய்வெடுக்க தாய்லாந்து செல்கிறார்.

ஐ.தே.க சிரேஸ்ட் உறுப்பினருக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் வழங்கிய ஹிருனிகா! காரணம் இது தான்!

செல்பியால் வந்த சோதனை : ஒருவர் பலி

யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரின் திருகுதாளம் அம்பலம்!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Sri Lanka All Out