Home இந்தியா ஜெயலலிதா மரணம் : சிபிஐ விாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்

ஜெயலலிதா மரணம் : சிபிஐ விாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்

140
0

Stalin Jayalalitha Death


ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,

ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்கிறது என்று மிகத்தெளிவாக அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்லியிருக்கிறார்.

இது சம்பந்தமாக முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பது உண்மை. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தான் நாட்டு மக்களுக்கு உண்மைத் தெரியவரும். ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தான் எனது கருத்து.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து 4-ந்தேதி யார் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களோ அவர்களையும், மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து பேசி அன்று மாலையில் யார் வேட்பாளர் என்பதை அறிவிக்க இருக்கிறோம். வெற்றி பெறக்கூடிய அளவிற்கு எங்களுடைய வியூகம் அமையும்.

2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. அந்த மாற்றத்தை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். மாற்றத்தை வரவேற்கக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

முல்லையில் கிருமி தொற்றால் 9 வயது சிறுமி பலி

சண் குகவரதன் விடுதலை : 5 கோடி வழங்க இணக்கம்!

தம்பதியை அச்சுறுத்தி 55 பவுண் கொள்ளை : அராலியில் சம்பவம்

ஐ.தே.க சிரேஸ்ட் உறுப்பினருக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் வழங்கிய ஹிருனிகா! காரணம் இது தான்!

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த காதல் ஜோடி : அநுராதபுரத்தில் சோகம்

யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரின் திருகுதாளம் அம்பலம்!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Stalin Jayalalitha Death