Home உலகம் சீனாவின் இ-4 விண்கலம் நிலாவில் தரை இறங்கியது

சீனாவின் இ-4 விண்கலம் நிலாவில் தரை இறங்கியது

208
0

Chang E 4


சீனாவின் சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது என்று சீனா அறிவித்துள்ளது.

பூமியை நிலவு சுற்றி வருவதும், அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும் ஒரே வேகத்தில் இருப்பதால் அதன் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ளது.

அதன் மற்றொரு பகுதியில் பெரும்பாலானவை, பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை உள்ளது. அந்தப் பகுதியை நிலவின் “இருண்ட பகுதி´ என்று அழைக்கிறார்கள்.

அந்தப் பகுதியில் முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, சீனாவின் சாங் இ-4 விண்கலம் இந்த மாதம் 8 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. அதனைத் தொடர்ந்து நான்கு நாள்களாக பூமியை வட்டமிட்ட அந்த விண்கலம், கடந்த 12 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு நுழைந்தது.

இந்த நிலையில், நிலவின் “இருண்ட பகுதி´யில் தரையிறங்குவதற்கு ஏற்ற வகையில், சாங் இ-4 விண்கலத்தின் வட்டப் பாதை, நீள்வட்டப் பாதையாக ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த விண்கலம் இன்று தரையிறக்கப்பட்டுள்ளது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

புலம்பெயர் தமிழர்கள் தீவிரவாதப் போக்குடையவர்கள் : சுமந்திரன்

யாழ் மக்களை முட்டாள்களாக்கும் தனியார் வைத்தியசாலையின் திருட்டு வேலை!

வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு : இராணுவம் சுற்றிவளைப்பு

எரித்து கொல்லப்பட்ட நாய் : பொலிஸார் விசாரணை

முட்டையால் பார்வையை இழந்த பெண் : நடந்தது என்ன?.

யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரின் திருகுதாளம் அம்பலம்!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Chang E 4