Home இந்தியா சபரிமலை விவகாரம் : வன்முறையாக மாறிய போராட்டம்

சபரிமலை விவகாரம் : வன்முறையாக மாறிய போராட்டம்

170
0

Sabarimala Protest


இந்தியா – சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிராக கேரளாவில் இடம்பெற்றுவரும் முழு அடைப்பு போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

இதனால் கேரளாவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. போலீஸ் பாதுகாப்பு அங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காலையில் இருந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் கேரளாவில் நடக்கும் முழு அடைப்பில் திடீர் என்று கலவரம் ஏற்பட்டுள்ளது. கொல்லம் பகுதியில் போராட்டக்காரர்கள் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் வேறு சில பகுதிகளிலும் கலவரம் நடப்பதாக தகவல்கள் வருகிறது.

கொல்லத்தில் இந்து அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்ட செய்ய முயன்றதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசார் மற்றும் போராட்டக்கார்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தற்போது வன்முறையில் முடிந்துள்ளது.

இந்த கலவரத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 போலீசார் உட்பட 4 பெண் போலீசார் காயம் அடைந்தனர். தற்போது இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலவரம் காரணமாக கொல்லத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு கூடுதலாக 5000 போலீசார் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் அம்மாநில முதல்வர் பினராயின் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

புலம்பெயர் தமிழர்கள் தீவிரவாதப் போக்குடையவர்கள் : சுமந்திரன்

யாழ் மக்களை முட்டாள்களாக்கும் தனியார் வைத்தியசாலையின் திருட்டு வேலை!

வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு : இராணுவம் சுற்றிவளைப்பு

எரித்து கொல்லப்பட்ட நாய் : பொலிஸார் விசாரணை

முட்டையால் பார்வையை இழந்த பெண் : நடந்தது என்ன?.

யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரின் திருகுதாளம் அம்பலம்!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Sabarimala Protest