Home விளையாட்டு முதலாவது ஒருநாள் போட்டியில் மண் கவ்விய இலங்கை: குசல் சிறப்பாட்டம்

முதலாவது ஒருநாள் போட்டியில் மண் கவ்விய இலங்கை: குசல் சிறப்பாட்டம்

131
0

Sri Lanka NZ ODI


சுற்றுலா இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டி சற்றுமுன் நிறைவுக்கு வந்தது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களினால் இலங்கை அணியை தோற்கடித்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, மார்ட்டின் குப்டில் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோரின் அதிரடியின் உதவியுடன் 372 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

நியூசிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கொலின் மன்ரோவின் விக்கெட்டினை லசித் மாலிங்க வீழ்த்தி இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். எனினும், இதனையடுத்து களம் நுழைந்த கேன் வில்லியம்சன் மற்றும் மார்ட்டின் குப்டில் அணியின் ஓட்ட எண்ணிக்கையை துரிதப்படுத்தினர்.

இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு, இரண்டாவது விக்கெட்டுக்காக 163 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் கேன் வில்லியம்சன் 76 ஓட்டங்களுடன் நுவான் பிரதீப்பின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஸ் டெய்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் குப்டில் தனது 14வது ஒருநாள் சதத்தை கடந்தார்.

சதத்தை கடந்த மார்ட்டின் குப்டில் 138 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ரோஸ் டெய்லர் 37 பந்துகளுக்கு 54 ஓட்டங்களை விளாசி ஓய்வறை திரும்பினார். இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து இறுதி நேரத்தில் களமிறங்கிய ஜிம்மி நீஷம், திசர பெரேரா வீசிய 49வது ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 7 விக்கெட் இழப்பிற்கு 371 ஆக உயர்த்த உதவினார்.

அபாரமாக ஆடிய ஜிம்மி நீஷம் வெறும் 13 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை குவிக்க, அறிமுக வீரர் டீம் செய்பர்ட் 11 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் லசித் மாலிங்க, திசர பெரேரா மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

நியூசிலாந்து அணி இன்று விளாசியுள்ள 372 என்ற ஓட்ட எண்ணிக்கையானது, இலங்கை அணிக்கு எதிராக அந்த அணி ஒருநாள் போட்டிகளில் பெற்றுக்கொண்டுள்ள அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2015ம் ஆண்டு டெனிடினில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 360/5 ஓட்டங்களை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, 373 என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வியடைந்தது.

அணி சார்பில் சிறப்பாக ஆடிய குசல் பெரேரா 102, நிரோஷன் டிக்வெல்ல 76 மற்றும் தனுஷ்க குணதிலக 43 ஓட்டங்களை பெற்றனர்.

நியூசிலாந்து அணியில் பந்துவீச்சில் ஜிம்மி நிசாம் 38/3 விக்கெட்டுக்களை வீ்ழ்த்தினார்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

புலம்பெயர் தமிழர்கள் தீவிரவாதப் போக்குடையவர்கள் : சுமந்திரன்

யாழ் மக்களை முட்டாள்களாக்கும் தனியார் வைத்தியசாலையின் திருட்டு வேலை!

வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு : இராணுவம் சுற்றிவளைப்பு

எரித்து கொல்லப்பட்ட நாய் : பொலிஸார் விசாரணை

முட்டையால் பார்வையை இழந்த பெண் : நடந்தது என்ன?.

யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரின் திருகுதாளம் அம்பலம்!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Sri Lanka NZ ODI