Home முக்கிய செய்திகள் குசல் பெரேராவின் மரண அடியால் வீழ்ந்தது தென்னாபிரிக்கா

குசல் பெரேராவின் மரண அடியால் வீழ்ந்தது தென்னாபிரிக்கா

162
0

Sri Lanka Victory Test


தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி த்ரில்லர் முறையில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

226 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய நிலையிலேயே இறுதி விக்கெட்டுக்கான (78-ஓட்டங்கள்) சாதனை இணைப்பாட்டத்துடன் இவ் வெற்றியை இலங்கை அணியினர் பதிவு செய்துள்ளனர்.

இப்போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய தென்னாபிரிக்க அணி 235 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. துடுப்பாட்டத்தில் குயின்ரன் டி கொக் (80), தெம்பா பவுமா (47) ஓட்டங்களை பெற்றனர்.

இலங்கையின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதனைத்தொடர்ந்து, தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை, வெறும் 191 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் (51), திமுத் கருணாரத்ன (30), லசித் அம்புல்தெனிய (24) ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் டேல் ஸ்ரெயின் 4 விக்கெட்டுக்களையும், வரோன் பிளன்டர் மற்றும் காகிசோ ரபட ஆகியோர் இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், 44 ஓட்டங்களினால் முன்னிலையில் இருந்த தென்னாபிரிக்க அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 259 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. துடுப்பாட்டத்தில் பப்டு ப்ளசிஸ் (90), குயின்ரன் டி கொக் (55), டீன் எல்கர் (35), ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இலங்கையின் பந்துவீச்சில் அறிமுக வீரர் லசித் அம்புல்தெனிய 5 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி, 304 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நான்காவது நாளான இன்று 3 விக்கெட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தமது ஆட்டத்தை தொடர்ந்தது. குசல் பெரேரா மட்டும் நிலைத்து நின்று ஆட ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஒருகட்டத்தில் 226 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள் என்று தடுமாறிக்கொண்டிருந்த அணிக்கு, குசலுடன் ஜோடி சேர்ந்த விஷ்வ பெர்னாண்டோ பக்கபலமாக நின்று ஓட்டங்களை குவிக்க உதவி புரிந்தார்.

இதன்மூலம் குசல் தனது முழுத்திறமையை பயன்படுத்தி நிச்சயம் தோல்வி தான் என்ற நிலையில் காணப்பட்ட அணியை மீட்டெடுத்து ஒரேயொரு விக்கெட்டால் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா (153-ஆட்டமிழக்காமல்), தனஞ்சய டி சில்வா (48), ஒசல பெர்னாண்டோ (37), லஹிரு திரிமன்ன (21), திமுத் கருணாரத்ன (20), விஷ்வ பெர்னாண்டோ (6-ஆட்டமிழக்காமல்) ஓட்டங்களை பெற்றனர்.

தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் கேசவ் மஹாராஜா 3 விக்கெட்டுக்களையும், தன்னே ஒலிவியர், டேல் ஸ்ரெயின் ஆகியோர் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

37 நாட்களில் 113 கிலோ ஹெரோயினுடன் 4 ஆயிரம் பேர் கைது

பாதாள குழு தலைவருடன் நாலகவிற்கு தொடர்பு? : சிஐடி விசாரணை

காணாமல் ஆக்கப்பட்ட மகளை தேடியலைந்த தாய் மரணம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

மாகந்துரே மதுஷின் கூட்டாளிகள் ஆயுதங்களுடன் அதிரடியாக கைது

யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரின் திருகுதாளம் அம்பலம்!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Sri Lanka Victory Test