Home இலங்கை வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

141
0

Police Attack Journalist


யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய வாள்வெட்டுக் குழுவினர், அங்கிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர். இது தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் – கொக்குவில் கருவேப்பிலை வீதியில் உள்ள வீடொன்றில் இன்று மதியம் நடந்தது.

8 பேர் கொண்ட குழுவினர் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதலை நடத்தினர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்து பொருள்களை வாளால் வெட்டிச் சேதப்படுத்தினர்.

வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் உட்பட 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் தீ வைத்தனர்.

வேன் உட்பட மோட்டார் சைக்கிள்கள் தீயில் முற்றாக எரிந்தன. வீட்டில் ஆள்கள் இருந்த போதே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ந.குகராஜா மீது சிவில் உடையில் நின்ற பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, ஊடகவியலாளர் வாயில் காயமடைந்துள்ளார்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

இரு வர்த்தகர்களை காணவில்லை; விசேட பொலிஸ் இன்ஸ்பெக்டர்கைது

பா.உ, மா.ச உறுப்பினர்களின் தபால் கொடுப்பனவு அதிகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட மகளை தேடியலைந்த தாய் மரணம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரின் திருகுதாளம் அம்பலம்!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Police Attack Journalist