Home இலங்கை மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

173
0

Mannar Mass Grave 3


மன்னார் மனித புதைகுழில் மீட்கப்பட்ட மனித எலும்புகளின் கார்பன் பரிசோதனைக்கான அறிக்கை மன்னார் நீதிமன்றத்தினூடாக இன்று (20) வெளிவரும் என எதிர் பார்க்கப்பட்டபோதும் குறித்த அறிக்கை வெளியிடப்படவில்லை.

பரிசோதனைக்கான அறிக்கை உத்தியோக பூர்வமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்காத நிலையில், கிடைக்கப் பெற்ற அறிக்கையினை வெளியிட முடியாது. , பீட்டா நிறுவனத்தில் இருந்து மன்னார் நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிக்கை கிடைத்தவுடனே வெளியிட முடியும் என்று மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா தெரிவித்தார்.

மன்னார் மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை கடந்த 16 ஆம் திகதி அதிகாலை அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து பெற்றுக் கொண்டார்.

மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான கார்பன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் கடந்த சனிக்கிழமை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

-குறித்த அறிக்கையினை சட்ட வைத்திய அதிகாரி இன்று புதன் கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் கையளித்தார்.
-இந்த நிலையில்,குறித்த அறிக்கை தொடர்பாக விசாரனைகள் இன்று மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் இடம் பெற்றது.

நிறுவனத்தினர் மன்னார் நீதிமன்றத்திற்கு கார்பன் பரிசோதனை அறிக்கையை அனுப்பி வைக்கும் பட்சத்தில் குறித்த அறிக்கை ஒரு பகிரங்க ஆவணமாகக் காணப்படும் என்பதால் அதனை எவரும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதே வேளை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ ஒரு விண்ணப்பதாரி என்பதினால் கார்பன் பரிசோதனைக்கான அறிக்கையை பெற்றுள்ளார். குறித்த அறிக்கையினை உத்தியோகபூர்வமான அறிக்கையாக மன்னார் நீதிமன்றம் கருதவில்லை. அறிக்கை மன்னார் நீதிமன்றத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டவுடன் அது தொடர்பில் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படும் என்று நீதிபதியினால் மன்றில் தெரிவிக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

இதேவேளை அகழ்வு பணிகள் இன்று இடம் பெற்றன. மன்னார் நீதவான் நேரடியாக சென்று அகழ்வு பணிகளை பார்வையிட்டார்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

இரு வர்த்தகர்களை காணவில்லை; விசேட பொலிஸ் இன்ஸ்பெக்டர்கைது

பா.உ, மா.ச உறுப்பினர்களின் தபால் கொடுப்பனவு அதிகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட மகளை தேடியலைந்த தாய் மரணம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Mannar Mass Grave 3