Home விளையாட்டு இலங்கை கிரிக்கெட் சபை சுமதிபால அணியினர் கைக்கு சென்றது

இலங்கை கிரிக்கெட் சபை சுமதிபால அணியினர் கைக்கு சென்றது

179
0

SLC Cricket Board Election


இன்று (21) விளையாட்டத்துறை அமைச்சில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலில் அனைத்து முக்கிய பதவிகளும் திலகங்க சுமதிபாலவின் அணியை சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

தலைவருக்கான போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் பொறுளாளரான சம்மி சில்வா 83 வாக்குகளை பெற்று இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில், உப தலைவர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் இன்னாள் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க 72 வாக்குககளை பெற்றுத் தோல்வியடைந்த நிலையில்,

82 வாக்குகளை பெற்றுக்கொண்ட சுமதிபால அணியின் ரவின் விக்ரமரத்ன மற்றும் 80 வாக்குகளை பெற்றுக்கொண்ட அர்ஜூன அணியின் கே.மதிவாணன் ஆகியோரும் உப தலைவர்களாக வெற்றி பெற்றுத் தெரிவாகினர்.

அத்துடன், செயலாளருக்கான வாக்கெடுப்பில் முன்னாள் செயலாளரான சுமதிபால அணியின் மொஹான் டி சில்வா 96 வாக்குகளை பெற்று தெரிவாகினார். அவருடன போட்டியிட்ட முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க 45 வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார்.

மேலும், உப செயலாளர் போட்டியில் 97 வாக்குகளை பெற்று கிரிஷாந்த கப்புவத்தையும், பொருளாளருக்கான போட்டியில் 102 வாக்குகளை பெற்று லசந்த விக்ரமசிங்கவும் தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையானது திலங்க சுமதிபால அணியினர் வசமாகியுள்ளமை இலங்கை கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

இரு வர்த்தகர்களை காணவில்லை; விசேட பொலிஸ் இன்ஸ்பெக்டர்கைது

பா.உ, மா.ச உறுப்பினர்களின் தபால் கொடுப்பனவு அதிகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட மகளை தேடியலைந்த தாய் மரணம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

SLC Cricket Board Election