Home இந்தியா காஷ்மீரில் இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்

காஷ்மீரில் இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்

153
0

Pakistan Shot Down Indian Jets


காஸ்மீரின் எல்லை பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் 2 ஜெட் விமானங்களை தமது இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது என்று பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விமானத்தில் இருந்து வீழ்ந்த இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

இரு நாடுகளின் விமானப்படையும் எல்லைதாண்டி வந்து தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து, காஷ்மீர் வான் பகுதியில் போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று இந்திய இராணுவப்படை நடத்திய வான் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டது என்றும்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும், இரு விமானிகள் பலியாகினார் எனவும் இந்திய அரச தரப்பு செய்திகள் வெளியாகியிருக்கிறது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

உறவுகளை தொலைத்தோரின் கண்ணீரில் அதிர்ந்தது கிளிநொச்சி

முல்லையில் பிறந்திருந்தால் புலி ஆகியிருப்பேன் – ஞானசார தேரர்

மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

உலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Pakistan Shot Down Indian Jets