Home இலங்கை எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது

எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது

145
0

Fuel Price Revison 2


எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இன்று (12) நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் அதிரடியாக அதிகரிக்கப்படவுள்ளது.

ஏப்ரல் வரையில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் நேற்று (11) நிதி அமைச்சை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் இன்று வரவு செலவு திட்டத்தின் 2ம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதை அடுத்து எரிபொருள் விலையை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது.

ஒக்டேன் 95 ரக மற்றும் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 7 ரூபா மற்றும் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 159 ரூபாவாகவும் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 132 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை 134 ரூபாவாகிறது.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையும் 1 ரூபாபவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒட்டோ டீசலின் புதிய விலை 104 ரூபாவென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

விடுதலை புலிகளை விட புகையிலை நிறுவனங்கள் பயங்கரமானவை

பெரும் தொகை ஹெரோயின், ஆயுதங்கள் மீட்பு : மொரட்டுவயில் பரபரப்பு

மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

உலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Fuel Price Revison 2