Home இலங்கை 18 மாணவர்களை காயமடைய செய்த முரட்டு ஆசிரியர்

18 மாணவர்களை காயமடைய செய்த முரட்டு ஆசிரியர்

182
0

School Student Assaulted


மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (13) இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 5ம் தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள் மீதோ குறித்த வகுப்பாசிரியர் இவ்வாறு மிக கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.

கையினாலும் தடியினாலும் மிகவும் கடுமையாக தம்மை தாக்கியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த மாணவர்களை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அவர்களுக்கான ஆரம்பக்கப்பட்ட சிகிச்சைகளையும் மேற்கொண்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவர்களை தாக்கிய குறித்த ஆசிரியரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த ஆசிரியர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பே இப்பாடசாலைக்கு கடமைக்காக வந்ததாகவும் இவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர் எனவும் இவருடைய நடவடிக்கை மோசமாக காணப்பட்டதால் இவரை இடமாற்றுமாறு பல முறை அதிகாரிகளை கேட்டதாகவும் குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது

திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்கள் பெயர் என்னிடம்

மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

உலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

School Student Assaulted