Home உலகம் பங்களாதேஷ் வீரர்கள் சென்ற மசூதி மீது சராமரியான துப்பாக்கிசூடு 50 பேர் பலியாகினர்

பங்களாதேஷ் வீரர்கள் சென்ற மசூதி மீது சராமரியான துப்பாக்கிசூடு 50 பேர் பலியாகினர்

162
0

Christchurch Shooting


நியூசிலாந்தில் மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிர் தப்பினர். இதில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். ஓட்டலில் இருந்து அவர்கள் ஒரு பேருந்தில் சென்றனர். அதிலிருந்து இறங்கி, மசூதியின் உள்ளே நுழைந்தபோது, அங்கு பயங்கரமாக துப்பாக்கிச் சத்தம் கேட்ட து. இதில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.

இதைக்கண்ட பங்களாதேஷ் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பதறிய அவர்கள் உடனடியாக தரையில் படுக்க வைக்கப்பட்டனர். பின்னர் அங்கி ருந்து பத்திரமாக ஹோட்டல் அறைக்குத் தப்பி சென்றனர். குறித்த மசூதி உள்ளிட்ட இரண்டு மசூதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 49 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுபற்றி பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால், ‘துப்பாக்கிச்சூட்டில் இருந்து மொத்த அணியும் காப்பாற்றப்பட்டுவிட்டது. அச்சமூட்டும் அனுபவம். தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

விக்கெட் காப்பாளர், முஷ்பிகுர் ரஹீம், ‘’கடவுள் எங்களை காப்பாற்றிவிட்டார். நாங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். இதுபோன்ற சம்பவம் இன்னொரு முறை நடக்கக் கூடாது. எங்களுக்காக பிரார்த்தியுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர் பங்களாதேஷ் – நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 3 வது டெஸ்ட் போட்டி, நாளை நடப்பதாக இருந்தது. குறித்த போட்டியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

மொரட்டுமுல்லையில் கொடூரமான துப்பாக்கி சூடு இருவர் பலி

திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்கள் பெயர் என்னிடம்

மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

உலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Christchurch Shooting