Home இலங்கை சுன்னாகம் பொதுச் சந்தை அமைக்க 300 மில்லியன்

சுன்னாகம் பொதுச் சந்தை அமைக்க 300 மில்லியன்

171
0

Chunnakam Market


வலிதெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் பொதுச்சந்தையினை அதிநவீன வசதிகள் கொண்ட சந்தைத் தொகுதியாக மாற்றுவதற்கு சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வலிதெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்சனின் முயற்சியின் மூலம் பெருநகர அபிவிருத்தி அமைச்சினூடாக இந்த ஆண்டு 200 மில்லியன் ரூபாவும் அடுத்த ஆண்டுக்கு 100 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்ப பணிகள் மற்றும் குறித்த திட்டத்தினை விரைவுபடுத்துவதற்காக பிரதேச சபைத் தலைவர் க.தர்சனின் அழைப்பின் பேரில் அமைச்சர் மனோ கணேசன் இன்று காலை சுன்னாகம் சந்தைக்கு விஜயம் செய்து சந்தையின் கட்டமைப்பு தொடர்பாக வியாபாரிகள் மற்றும் பொது மக்களோடு கலந்துரையாடினார்.

இதன்போது சுன்னாகம் சந்தையினுடைய பெருமையினை வெளிப்படுத்துகின்ற பாரம்பரிய கட்டிடத்தில் மாற்றம் ஏற்படாத வகையில் நவீன சந்தைத் தொகுதி அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனால் சுட்டிக்காட்டப்பட்டது.

இவற்றை கவனத்தில் எடுத்த அமைச்சர் பெருநகர அபிவிருத்தி அமைச்சருக்கு குறித்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டு இலங்கையின் சிறந்த சந்தைத் தொகுதியாக சுன்னாகம் சந்தையினை மாற்றுகின்ற பணி விரைவு படுத்தப்படும் என தெரிவித்தார்.

இவ்விஜயத்தின் போது வலிதெற்கு பிரதேச சபையின் மற்றைய சந்தையான மருதனார்மடம் சந்தைக்கும் சென்று அங்குள்ள நிலமைகள் தொடர்பாக ஆராய்ந்ததோடு மருதனார்மட மரக்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முகுந்தன் உட்பட்ட வியாபாரிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

மொரட்டுமுல்லையில் கொடூரமான துப்பாக்கி சூடு இருவர் பலி

திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்கள் பெயர் என்னிடம்

மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

உலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Chunnakam Market